இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராவாரா சங்கா ?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சங்கக்காரவை தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தி டெலிகிராப் UK இன் அறிக்கையின்படி, இங்கிலாந்தின் white ball அணிக்கு (ODI, T20) பயிற்சியாளராக செயல்பட்ட மோட்டிற்குப் பதிலாக சங்கக்காரா விருப்பமானவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

ஜனவரி 2021 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக சங்கக்காரா இருந்து வருகிறார்,

சங்கக்காரவைத் தவிர, முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி மற்றும் ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்சியாளரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான ஜொனாதன் டிராட் ஆகியோரும
குறித்த பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளனர்.

#Sangakara #ECB #Coach