#RobinSingh
இப்பல்லாம் Cricket ல அதிகமா உபயோகப்படுத்துற வார்த்தை Finisher ங்குற மாதிரி 90s காலக்கட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிஞ்ச வார்த்தை Hitter. அப்பல்லாம் ஒவ்வொரு Team லயும் ஒரு Hitter இருப்பாங்க. Hitter னா வேற ஒண்ணுமில்ல எந்த கட்டத்துலயும் அவங்க இறக்கப்பட வாய்ப்புண்டு ஆனால் முதல் பால்ல இருந்தே அவங்கட்ட Run எதிர்பார்க்கப்படும். ஏறக்குறைய CSK டீம்ல நம்ப தல Dhoni மண்டைய பிக்க வைக்குற நிலைன்னு சொன்னா ஈசியா புரியும்னு நினைக்குறேன் 🚶♂️🚶♂️🚶♂️
Srilanka க்கு Jayasurya, Pakistan க்கு Afridi, South Africa வுக்கு ஒரு Lance Klusener னு எல்லா டிமுக்கும் உண்டு ஆனா இந்திய டீம் மட்டும் மஞ்சுரேக்கர் போல கும்பல்கள வச்சி அடிக்குற நேரத்துல தடவிட்டு இருந்த காலக்கட்டம் நமக்கும் இதே போல ஓரு ஆளு கிடைக்க மாட்டாரான்னு ஏங்குனப்ப 33 வயசுல நுழைஞ்சவருதான் இந்த Robin Singh. கிட்டத்தட்ட கேரியரே முடிஞ்ச மாதிரிதான்.
Titan Cup ல கங்குலிக்கு காயம்னு பாதில கெளம்ப அந்த சீரீஸ்ல வேற ஆளு கிடைக்காம லக்குல ஒரு வாய்ப்பு கிடைக்க அந்த மேட்ச் பார்த்திருந்தவங்களுக்கு தெரியும் இந்த ராபின்சிங்னா யாருன்னு. Australia கூட மேட்ச் 7வது இறங்கி 6 பாலுக்கு 6 ரன்னு, Fielding ஒரு 20 ரன்னு Save பண்ணது, மார்க் வாக் , ஸ்டூவர்ட் லா விக்கெட்ட தூக்கி டர்ன் பண்ணி விட்டு மேட்ச் ஜெயிக்க வச்சதெல்லாம் இப்ப கூட மறக்காத மெமரிஸ் .
நம்பாளு வந்தாலே இந்த அண்ணன் தம்பி அமேரிக்க மாப்பிள்ளைங்குற பேச்சுக்கே இடமிருக்காது டைரக்டா வீச்சுதான். மிட் லெக்ல சும்மா பிச்சிகிட்டு போகும் சிக்ஸ்கள், காயம்னா என்னென்னே தெரியாது மேட்ச்க்கு ஒரு முப்பது வாட்டியாவது டைவ் அடிப்பாப்புல. மேட்ச்ல பவுலிங் சொதப்புறப்பல்லாம் ஒரே நம்பகரமான ஆப்சன் ராபின்சிங்தான். Medium Fast ல போட்டு ரன்ன நகர விடமாட்டாப்புல ரெண்டு விக்கெட்டும் கன்பார்ம். மேட்ச்சோட போக்கு எப்டி போனாலும் சரி எதுக்கும் கவலைப்பட மாட்டான்யா இந்த மனுசன் நம்ப பேருக்கு நாலு சிக்ஸு. அப்டி இல்லயா பால வேஸ்ட் பண்ணாம நாலு சாத்து சாத்திட்டு போயிட்டே இருப்பாப்புல.
ஏறக்குறைய Tendulkar ன் ஆஸ்தான ப்ளேயர்னே சொல்லலாம். சும்மா அஞ்சு ஆறு வருசம் அசைக்க முடியாத இடத்த பிடிச்சிட்டு இளைஞர்களுக்கு வழிய விட்ட இவரை எவ்ளோ பிடிச்சிருந்தா MI Team க்கு பீல்டிங் கோச்சா அழகு பார்த்திருக்குற அளவு பிடிச்ச இந்திய கிரிக்கெட் வரலாற்றுல மறக்க முடியாத Player 👍
✍️ Pravin Devaraj