ஹசரங்கவுக்கு பதிலான மாற்று வீரர் அறிவிப்பு..!

தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக வனிந்து ஹசரங்க ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நேற்றிரவு இலங்கையின் முதலாவது ஆட்டத்தில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை எடுத்த போதிலும், அவர் தனது கடைசி ஓவரை வீசும்போது வலியில் இருந்தார்.

மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஹசரங்க விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது.