ஐபிஎல் அணிகளால் உலக கிரிக்கெட்டுக்கே ஆபத்து.. உடனே விழித்து கொள்ளுங்கள்.. ஆஸி. ஜாம்பவான் எச்சரிக்கை

ஐபிஎல் அணிகளால் உலக கிரிக்கெட்டுக்கே ஆபத்து.. உடனே விழித்து கொள்ளுங்கள்.. ஆஸி. ஜாம்பவான் எச்சரிக்கை

ஐபிஎல் அணிகளால் உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் இயன் செப்பல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தற்போது ஐபிஎல் பாணியில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு டி20 கிரிக்கெட் தொடரை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இதில் இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் அணிகள் இந்த தொடரில் உள்ள டீம்களை வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் விருப்பம் தெரிவிக்கிறது. முதலில் எஸ்.ஏ 20 தொடர் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் தென்னாப்பிரிக்காவில் ஒரு அணியை வாங்கினார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக நஷ்டத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், தற்போது லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை பார்த்து தற்போது ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள அணியை வாங்குமாறு ஐபிஎல் அணிகளை வற்புறுத்துகிறது.

இதன் மூலம் பெரும் லாபம் பார்க்க முடியும் என ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் நினைக்கிறது. ஏற்கனவே துபாய், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தும் தாங்கள் நடத்தும் தி ஹெண்ட்ரட் தொடரில் உள்ள அணிகளை ஐபிஎல் அணிகளை வாங்க கோரிக்கை விடுத்து இருக்கிறது.

இதற்கு தான் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் இயன் சாப்பேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வெற்றிகரமான ஐபிஎல் அணிகளை வைத்து தங்கள் நாட்டு நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான அணியை வாங்க ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம் கிரிக்கெட்டுக்கு நிச்சயம் ஆபத்து தான் ஏற்படும். ஏனென்றால் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஒவ்வொரு நாட்டில் உள்ள தலைசிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்வார்கள். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வீரர்கள் தங்களது நாட்டிற்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அந்தந்த நாடுகளின் அணி நிச்சயம் பாதிப்பை சந்திக்கும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் பணம் தேவைப்படுகிறது என்பதால் இதை பயன்படுத்திக் கொண்டு ஐபிஎல் அணிகளும் மற்ற நாடுகளில் அணியை வாங்கி முதலீடு செய்கிறார்கள. இனி டி20 லீக் தான் உலகம் முழுவதும் நடைபெறுகிறது என முடிவெடுத்துவிட்டால் அதற்கு ஏற்றார் போல் ஒரு நீண்ட கால திட்டத்தை தயாரித்து அதற்கேற்றார் போல் விதிகளை மாற்றுங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என இயன் சாப்பல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Previous articleவினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் தர மாட்டோம்.. மல்யுத்த சம்மேளனம் எதிர்ப்பு
Next articleபார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லப்போவது யார்? ரிக்கி பாண்டிங் கணிப்பு