25 வருட வரலாறு.. போராடித் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்.. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா

25 வருட வரலாறு.. போராடித் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்.. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1 – 0 என்ற அளவில் கைப்பற்றியது. இதன் மூலம் 25 ஆண்டு காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது டெஸ்ட் ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு முறை கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது இல்லை. ஒவ்வொரு முறையும் தென்னாப்பிரிக்காவே டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. அந்த சாதனையை மீண்டும் தொடர்ந்தது தென்னாப்பிரிக்கா.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்கா 160 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்களும், ஷமர் ஜோசப் 5 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர்.

அடுத்த ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்திருந்தார். தென்னாப்பிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர் நான்ட்ரே பர்கர் 3 விக்கெட்களும், வியான் முல்டர் 4 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். சுழற் பந்துவீச்சாளர் கேசவ் மஹராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இந்த முறை பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டது. எய்டன் மார்கிரம் 51 ரன்களும், வெரின் 59 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸ் 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

263 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக குடகேஷ் 45 ரன்கள் அடித்திருந்தார். தென்னாப்பிரிக்காவின் ரபாடா 3, கேஷவ் மகராஜ் 3, பீட் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். இதை அடுத்து தென்னாப்பிரிக்கா 1 – 0 என இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் 13 விக்கெட்களை வீழ்த்திய கேசவ் மகராஜ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Previous articleபலத்த அடி வாங்கிய வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது?
Next article8.4 கோடி வீரரால் சிஎஸ்கேவுக்கு நேர்ந்த கதி.. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. விளாசிய சுனில் கவாஸ்கர்