7.5 கோடி ரூபாயிலிருந்து 75 லட்சமாக குறைந்த சம்பளம்.. வாய் கொழுப்பால் மிதி வாங்கிய வீரர்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுவரை ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
இதுவரை 10 அணிகளும் 46 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா ஏலத்தில் 1574 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த சூழலில் பல வீரர்களின் சம்பளம் அபாரமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக ரிங்கு சிங்கின் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் இன் சம்பளம் வெறும் 55 லட்சம் ரூபாய் தான்.
ஆனால் தற்போது அவர் 13 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று ஹென்ரிச் கிளாசன் சம்பளம் 5 கோடி 25 லட்சம் ரூபாயிலிருந்து தற்போது 23 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. ஆனால் அடுத்த சேவாக் போல் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் பிரிதிவி ஷாவின் சம்பளம் 7.5 கோடி ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாயாக தற்போது பல மடங்கு சரிவை சந்தித்திருக்கிறது.
24 வயதான பிரித்விஷா அண்டர் 19 உலக கோப்பையை வென்று ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் படிப்படியாக உயர்ந்தார். ஆனால் தற்போது ஒழுங்கீனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இந்திய அணியில் இடம் பெறாமல் தவித்து வருகிறார். அண்மையில் மும்பை ரஞ்சிப் போட்டியில் இருந்து பிரித்விஷா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு காரணம் பயிற்சிக்கு சரிவர வரவில்லை. உடல் பருமனாக இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளில் பிரித்திவி ஷா மாட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 79 போட்டிகளில் விளையாடி 1892 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஸ்டிரைக் ரேட் 147 ஆகும். இந்த சூழலில் பிரித்வி ஷாவை டெல்லி அணி விடுவித்து இருக்கிறது. தம்மை மீண்டும் எந்த அணியும் எடுக்காது என்பதால் தன்னுடைய அடிப்படை விலையை பிரித்வி ஷா 75 லட்சம் ரூபாயாக குறைத்து இருக்கிறார்.
பிரித்வி ஷா போன்ற திறமையான வீரர்கள் அடிப்படை விலை இரண்டு கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தம்மை எந்த அணியும் எடுக்க முன் வராது என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.இதேபோன்று கடந்த ஐபிஎல் சீசனில் தேர்வு செய்யப்படாத சர்பராஸ் கானும் தன்னுடைய அடிப்படை விலையை 75 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார்.