‘தல’ தோனியை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.. அஸ்வின் உடன் கூட்டணி.. CSK வருகை குறித்து ஜடேஜா

‘தல’ தோனியை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.. அஸ்வின் உடன் கூட்டணி.. CSK வருகை குறித்து ஜடேஜா

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் ஒரு மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்க்கு ஜடேஜா வந்து சேர்ந்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஜடேஜா நேரடியாக துபாயில் இருந்து சென்னை வந்து விட்டார்.

சென்னை வந்தது குறித்து ஜடேஜா அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம். “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் என்னுடைய சொந்த ஊருக்கு வந்து இருக்கின்றேன். சிஎஸ்கே அணியுடன் மீண்டும் இணைந்து இருப்பது உற்சாகமாக இருக்கின்றது. எங்களின் ஒரே ஒரு தல தோனியை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.”

“எங்க தல தான் பாஸ். இதேபோன்று அஸ்வினுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இருவரும் அதிக நேரம் செலவிட்டு எப்படி பந்து வீசுவது. அவர் என்ன யோசிக்கின்றார் என்பதை பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பேன். ஒவ்வொரு போட்டியையும் அவர் வித்தியாசமாக அணுகுவார். எனவே அவருடன் கலந்து உரையாடும் அந்த நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.”

“அவரிடம் சில பௌலிங் டிப்ஸ் செய்யும் பெற்றுக் கொள்வேன். அஸ்வின் போன்ற ஒரு வீரருடன் இருப்பது மிகவும் நல்ல விஷயம். அவர் என்னுடைய பௌலிங் பார்ட்னர். அவருடன் நல்ல நேரத்தை நான் செலவிடுவேன்” என்று ஜடேஜா கூறியுள்ளார். ஜடேஜா கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 14 போட்டிகளின் விளையாடி 11 இன்னிங்ஸில் மொத்தம் 267 ரன்கள் சேர்த்து இருந்தார். இதில் ஒரு அரை சதம் அடங்கும்.

ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 142 என்று அளவில் இருந்தது. பந்துவீச்சை பொறுத்தவரை ஜடேஜாவுக்கு கடந்த ஆண்டு சரிவாகவே அமைந்தது. 14 போட்டிகளில் வெறும் எட்டு விக்கெட்டுகளை மட்டுமே ஜடேஜா வீழ்த்தி இருந்தார். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டு ஜடேஜா 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா எப்போதெல்லாம் பந்துவீச்சில் அசத்துகிறாரோ அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஓய்வு குறித்து கோலி கருத்து..!
Next articleபாகிஸ்தானை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. அம்பானி செய்த ஒரு மூவ்.. நோட்டீஸ் அனுப்பும் பாக். வாரியம்