ரோகித் சர்மாவின் ஒரே முடிவால் 3 வீரர்களின் எதிர்காலம் காலி.. பரிதாபமான நிலையில் சிஎஸ்கே கேப்டன்

ரோகித் சர்மாவின் ஒரே முடிவால் 3 வீரர்களின் எதிர்காலம் காலி.. பரிதாபமான நிலையில் சிஎஸ்கே கேப்டன்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த சூழலில் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு பல இளம் வீரர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இதனால் அந்த இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். முதலில் ரோஹித் சர்மா என்ன முடிவு எடுத்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்தியா வென்ற நிலையில் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா அடுத்த 2027 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டி வரை விளையாட முடிவு எடுத்திருக்கிறார். அப்போது ரோகித் சர்மாவுக்கு 40 வயது ஆகிவிடும்.

இதன் மூலம் இந்திய அணிக்குள் வரலாம் என காத்திருந்த வீரர்களுக்கு அது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் இந்த முடிவால் முதலில் பாதிக்கப்பட போவது சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் தான். ஏற்கனவே டி20 அணியில் ருதுராஜ் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார்.

டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் ருதுராஜ், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் ரோகித் சர்மா தான் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடுவேன் என கூறிவிட்டதால் ருதுராஜ் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

இதனால் வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர் இந்திய அணிக்கு மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்தான். டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்து விட்டார். டி20 அணியிலும் அவருக்கு இடம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழலில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் அண்மையில் தான் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரோகித் சர்மா இல்லை என்றால் ஜெய்ஸ்வால், கில் ஜோடி தான் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரோகித் சர்மா தற்போது ஓய்வு முடிவு எடுக்கவில்லை என கூறிவிட்டதால் ஜெய்ஸ்வால் மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இஷான் கிசன். இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் கடினம் என்ற நிலையில் தன்னுடைய அவசர புத்தியால் அணியை விட்டு விலகி விட்டார்.

தமக்கு ஓய்வு வேண்டுமென கூறிவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது பிசிசிஐயை எரிச்சல் அடைய செய்தது. மேலும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இஷான் கிஷன் அணியை விட்டு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அணிக்கு வர கடுமையாக முயற்சித்து வருகிறார்.இந்த கட்டத்தில் தான் ரோகித் சர்மா ஓய்வு பெற்றால் இசான் கிஷன் தொடக்க வீரராக வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் ரோகித் இந்த முடிவு அவருக்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

Previous articleபாகிஸ்தானை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. அம்பானி செய்த ஒரு மூவ்.. நோட்டீஸ் அனுப்பும் பாக். வாரியம்
Next articleகம்பீர் சொன்னால் தான் கேப்டன் பதவி.. பல்டி அடித்த பிசிசிஐ..