17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடியதை கண்டித்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்?

17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடியதை கண்டித்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் குறைந்த ரன்கள் அடித்த அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 60, 70 ரன்கள் எடுக்க முயற்சி செய்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி 40 ரன்கள் தொடுவதே மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது.

இதன் காரணமாக சிஎஸ்கே அணி தற்போது புள்ளி பட்டியலில் ஆறு தோல்வி இரண்டு வெற்றி என பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும், வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.

மற்ற அணிகள் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடும் நிலையில் சிஎஸ்கே அணி மட்டும் மெதுவாக ரன்களை சேர்க்கிறது. தங்கள் அணியினர் மற்ற அணி வீரர்கள் போல் பேட்டை சுற்றி சிக்ஸர் அடிக்க தேவை இல்லை என்றும் சாதாரண கிரிக்கெட் ஷாட்களை ஆடி பவுண்டரி அடித்தாலே போதும் என்று தவறான கொள்கையை சிஎஸ்கே கடைப்பிடித்து வருகிறது.இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கூட ஏதோ டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் ரச்சின் ரவீந்தரா மற்றும் சேக் ரஷீத் ஆகியோர் வெறும் கவர் டிரைவ் ஷாட்களை ஆட முயற்சி செய்தார்கள்
ஆனால் ஆயுஸ் மாத்ரே வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரி, சிக்சர் என பட்டையை கிளப்பினார். 15 பந்துகளில் ஆயுஸ் மாத்ரே 32 ரன்கள் அடித்தார். இதில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும்.

இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடியதற்கு பிளமிங் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, தமக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்றும், கள சூழலை கவனிக்காமல் முதல் பந்திலே அடித்த ஆடுவது சரியான அணுகுமுறை இல்லை என்றும் தமக்கு தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பாக ஒரு போட்டியில் பேசி இருந்த பிளமிங், இது ஒன்றும் பேஸ்பால் இல்லை என்றும் கிரிக்கெட் அதற்கு தகுந்தார் போல் தான் ஆட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற அணிகள் எல்லாம் அதிரடியாக ஆடும் போது சிஎஸ்கே இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பாடுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ஆயூஷ் மாத்ரேவை பாராட்டாமல்,பிளமிங் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மறைமுகமாக ஆயுஷ் மாத்ரேவை கண்டிப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஆயுஷ் மாத்ரேவுக்கு சுதந்திரம் இல்லாமல் மெதுவாக விளையாடும் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.

Previous articleடாஸ்-ஆல் தான் தோற்றோம்.. தோல்விக்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்
Next article“அப்போ சிஎஸ்கே பேட்டிங்கை பார்த்து பயந்தார்கள் ஆனால்..” கிழித்துத் தொங்கவிட்ட அம்பத்தி ராயுடு