சத்தமே இல்லாமல் சைலண்டாக இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு கேப்டனாகும் தகுதியோடு வலம் வருகிறான் ஸ்ரேயாஸ் சந்தோஷ் ஐயர் 😎
ஆம், ஐபிஎல் லில் மூன்று வெவ்வேறான அணிகளை நான்கு தடவை ப்ளே ஆஃப்பிற்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 👏
2019 ஆம் ஆண்டு டெல்லி அணியை ப்ளே ஆஃப்பிற்கு கொண்டு சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று அந்த அணியை இரண்டாம் இடம் பெற வைத்தான்…
2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு முதல் முறையாக தலைமை ஏற்று அந்த அணியை சாம்பியன் ஆக்கி இருக்கிறான்!
இந்த வருஷம் பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்கு பிறகு ப்ளே ஆஃப்பிற்கு கொண்டு வந்திருக்கிறான் ஸ்ரேயாஸ்!
ஐபிஎல்லில் 82 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 48 வெற்றிகளை பெற்று இருக்கிறான்! 58.53 வெற்றி சதவீதமாகும்!
11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்றால் அதற்கு காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் தான்! அவனுடைய தலைமை தான் என்பதை இங்கு யாராலும் மறுக்க முடியாது!
எந்த அணியை கொடுத்தாலும் அந்த அணியை மெருக்கேற்றி முன்னே கொண்டு செல்கின்றான் இந்த ஸ்ரேயாஸ் ஐயர் 👏
இந்திய கிரிக்கெட்டின் வருங்கால கேப்டன் பதவிக்கு சுப்மன் கில்லோடு இவனும் சரிசமமாக நிற்கப் போகிறான்!
மற்றவர்கள் மாதிரி இல்லாமல் போன வருஷம் KKR அணிக்கு கோப்பையை வாங்கி தந்த கையோடு அந்த அணியிலிருந்து விலகி ஏலத்திற்கு சென்றான்!
என் திறமையை நான் காணப் போகிறேன் என்று ஏலத்திற்கு சென்று இந்த வருஷம் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்று திறம்பட வழிநடத்தி வருகிறான் 👏
என் வழி தனி வழி என்று அவன் ஒரு புதிய பாதையில் சென்று கொண்டு இருக்கிறான் ஸ்ரேயாஸ் ஐயர்! அந்த பாதை பஞ்சாப் அணிக்கு முதல் கோப்பையை பெற்று தரும் அளவிற்கு வலுவாக உள்ளது 💯
#shreyasiyer #punjabkings #ipl2025 #ipl #cricketfans #cricketlovers