டெவால்ட் பிரேவிஸ் டெஸ்ட் அகிமுகம்

வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பதற்கேற்ப டெவால்ட் பிரேவிஸ் எப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆட ஆரம்பித்தாரோ அன்று முதல் அவரின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கிறது 💯

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடிய டெவால்ட் பிரேவிஸ் சிறப்பாக ஆடி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்!

ஐபிஎல்’லில் சென்னை அணிக்காக பிற்பகுதியில் ஆடிய அவர் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 225 ரன்களை குவித்திருந்தார்!

அதன் விளைவாக தேசிய அணியிலும் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்! தென் ஆப்பிரிக்கா அணிக்காக மீண்டும் விளையாடப் போகிறார்!

நாளை தொடங்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடங்கும் டெஸ்டில் டெவால்ட் பிரேவிஸ் அறிமுகமாக போகிறார்!

அதோடு டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் தொடங்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார் டெவால்ட் பிரேவிஸ் 😎

பிரேவிஸ் 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுக வீரராக கால்பதிக்க போவது சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது!

டெவால்ட் பிரேவிஸ் தேசிய அணியில் இடம் பிடித்திருப்பதற்கு ஐபிஎல்’லில் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடியதே காரணமாகும்!

விரைவில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும் பிரேவிஸ் ஆடுவார் என்று நினைக்கிறேன்!

தென் ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பார்!

வாழ்த்துக்கள்
டெவால்ட் பாகுபலி பிரேவிஸ் 🤏😎

#DewaldBrevis #chennaisuperkings #southafricacricket #ipl2025 #savszim2025 #testcricket #cricketnews #cricketlovers

✍️ sathya kumaran

Previous articleஇலங்கை ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம்
Next articleஒரே ஒரு மாற்றத்தை செய்தால் போதும்- முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்