கிரிக்கெட்டில் இந்த மாதிரி வேறு யாரும் செய்து இருக்க மாட்டார்கள்!

Massive Respect to Wiaan Mulder 👏

உலக சாதனையை படைக்க இன்னும் 34 ரன்கள் மட்டுமே தேவை! நினைத்திருந்தால் அந்த லாராவின் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் (400 ரன்கள்) குவித்த வீரர் என்ற சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்து இருக்கலாம்!

ஆனால் அதை முல்டர் செய்யாமல் டிக்ளேர் பண்ணியதை நினைத்தால் உண்மையிலுமே எனக்கு வியப்பை தருகிறது 🥹

அதுவும் இல்லாமல் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தான் நடைபெற்று வருகிறது! நினைத்து இருந்தால் பல சாதனைகள் செய்து இருக்கலாம்!!

இருந்தாலும் சொந்த சாதனைக்கு மதிப்பு கொடுக்காமல் எதிரணி ஆட வேண்டும் என்று டிக்ளேர் செய்த முல்டருக்கு பாராட்டுக்கள் 👌

கிரிக்கெட்டில் இந்த மாதிரி வேறு யாரும் செய்து இருக்க மாட்டார்கள்! சாதனை படைக்க வேண்டும் என்று நோக்கில் தொடர்ந்து ஆடி இருப்பார்கள்!

ஆனால் முல்டர் அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இந்த முடிவை எடுத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்!

நிறைய பேருக்கு தெரியுமா? இல்லை தெரியாதா? என்று தெரியவில்லை! 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா 400 ரன்கள் எடுத்து உலக சாதனையை படைத்த போது,

அப்பொழுது எதிர் அணியில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் லாரா மீது “டிக்ளேர் பண்ணாமல் சொந்த சாதனைக்காக ஆடிக் கொண்டு இருக்கிறார்” என்று விமர்சனம் செய்தது எனக்கு நினைவு இருக்கிறது 💯

அப்போது அந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் கேப்டனாக பிரையன் லாரா இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!!

ஒருவேளை இதெல்லாம் மனதில் வைத்து முல்டர் டிக்ளேர் செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை!

எது எப்படியோ ஒரே ஒரு இன்னிங்ஸ் அவுட் ஆகாமல் ஆடினாலும் சில பல சாதனைகளை படைத்த தென் ஆப்பிரிக்கா புதிய டெஸ்ட் கேப்டன் வியான் முல்டருக்கு பாராட்டுக்கள் தெரிவிப்போம் 👏👌🔥

என்ன இருந்தாலும் முல்டர், பிரையன் லாராவின் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்து இருக்கலாம் என்று நான் Personal ஆ Feel பண்றேன் 🤷

#WiaanMulder #BrianLara #SAvsZIM #savszimtest2025 #WIvsENGTEST2004 #testcricket #WTC2025to2027 #cricketlovers

Previous articleஇலங்கை T20 அணி அறிவிப்பு!
Next articleதினமும் 600 ரூபாய் சம்பளத்தில் டென்னிஸ் கிரிக்கெட் பந்தில் விளையாடிய Akaash deep