தினமும் 600 ரூபாய் சம்பளத்தில் டென்னிஸ் கிரிக்கெட் பந்தில் விளையாடிய Akaash deep

ஆகாஷ் தீப்பின் சொந்த மாநில கிரிக்கெட் போர்டு சஸ்பெண்டு செய்யப்பட்டதால் பெங்கால் கிரிக்கெட்டிற்கு மாறி விளையாடினார்!

ஆறு மாதங்களுக்கு முன்பு தனது தந்தையையும் மற்றும் சகோதரனையும் இழந்தார்!

தினமும் 600 ரூபாய் சம்பளத்தில் டென்னிஸ் கிரிக்கெட் பந்தில் விளையாட சென்றார்!

தனது சகோதரியை புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தார்!!

இப்படி பல கடினமான சூழலில் இருந்தும் கூட கிரிக்கெட்டை கைவிடாமல் தொடர்ந்து போராடி விளையாடி வந்த

ஆகாஷ் தீப் தான் பர்மிங்காமில் வரலாற்று வெற்றியை இந்திய அணி பெறுவதற்கு காரணமாக அமைத்திருக்கிறார்!

பர்மிங்காமில் வலுவான இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்ததோடு அவர்களை நிமிர விடாமல் தனது பவுலிங் மூலம் கட்டுப்படுத்தி பத்து விக்கெட்டுகளை எடுத்து சாதித்து இருக்கிறார்!!

எவ்வளவு ரன்கள் அடித்தாலும் திரும்ப அடித்து விடுவோம் என்ற ஏளன பேச்சை பேசிய ஹாரி புரூக்கை, இதெல்லாம் எங்ககிட்ட நடக்காது போடா வெளியே என்று காலில் போட்டு அனுப்பினார்!

இவ்வளவு கால வருடத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய பவுலரின் சிறந்த பவுலிங்கை போட்டு மாஸ் காட்டி இருக்கிறார்! ஆம்…,

இந்த டெஸ்டில் 187 ரன்கள் விட்டு கொடுத்து பத்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார் ஆகாஷ் தீப்! இதுவே இங்கிலாந்து மண்ணில் இந்திய பவுலரின் சிறந்த பவுலிங் ஆகும்!

யாருமே பண்ண முடியாத ஒரு சாதனையை அசால்ட்டாக செய்தவர் ஆகாஷ் தீப் 🔥👏

அது மட்டுமல்ல இங்கிலாந்து அணியின் முதலில் ஆடும் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை அவுட் செய்து வெளியேற்றிய முதல் இந்திய பவுலர் ஆகாஷ் தீப் ஆவார்!!

பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஆலி போப் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழத்தினார்!!

இப்படி ஒரு கனவு போட்டியை விளையாடி இருக்கிறார் ஆகாஷ் தீப் 🔥
சேர்த்து வைத்து மொத்த வித்தையும் பர்மிங்காமில் வெளிக்காட்டி வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்து நம் எல்லோரையும் திக்குமுக்காட வைத்திருக்கிறார் ஆகாஷ் தீப் 👌👏

நாளைய வரலாறு சொல்லும், பேஸ்பால் ஆடும் அணி ஆகாஷ் தீப்பின் பவுலிங்கிற்கு முன்னால் பெட்டி பாம்பாக அடங்கி போனது என்று 🫰

தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை! தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகமே தடையும் இல்லை என இரண்டாம் இன்னிங்ஸில் பவர்புல் பவுலிங் போட்ட ஆகாஷ் தீப்பை பாராட்டுவதில் நாம் பெருமை கொள்கிறோம்!!

#Akashdeep #TeamIndia #INDvsENG #indvsengtest2025 #testcricket #WTC2025to2027 #cricketlovers

Previous articleகிரிக்கெட்டில் இந்த மாதிரி வேறு யாரும் செய்து இருக்க மாட்டார்கள்!
Next articleவனிந்து ஹசரங்கவுக்கு காயம்..!