பேசப்படாத பார்ட்னர்ஷிப்…
ஆம்..
90களில் பல டிவிகள் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனதும் ஊமை ஆகிவிடும் என்பது நாம் அறிந்ததே..
சில காலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு….
லோ ஆர்டர் பார்ட்னர்சிப்கள் மூலம் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர்கள் ராபின் சிங் மற்றும் ஜடேஜா…
இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் உண்டு …
அட்டகாசமான பீல்டர்கள்…
அதிவேகமாக ரன்களை ஓடி எடுப்பவர்கள்..
விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள டைவ் அடித்து உள்ளே நுழைபவர்கள்..
புழுதியில் புரண்டு எழும் அழுக்கு சட்டைக்காரர்கள்..
சமயத்தில் இந்தியாவிற்கு தேவைப்பட்டால் பந்து வீச்சிலும் அசத்தக் கூடியவர்கள்…
ராபின் சிங் தமிழ்நாடு அணிக்காக விளையாடியவர்…
குஜராத்தை சேர்ந்த ராஜ வம்சத்தை சேர்ந்தவர் அஜய் ஜடேஜா…
பலமுறை இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர காரணமாக இருந்து இந்த இருவரும் எவர்கிரீன் பார்ட்னர்கள்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் லோ ஆர்டர் பார்ட்னர்ஷிப் என்றால் நினைவுக்கு வருபவர்கள் அஜய் ஜடேஜா மற்றும் ராபின் சிங்… 👍👍👍
இவர்களது பார்ட்னர்ஷிப் உங்களுக்கு நினைவிருந்தால் பகிருங்கள்!
✍️ Selva Kumar