மாவீரன் ரவீந்திர ஜடேஜா!
இப்போ ஒருவர் என்கிட்ட கேட்டார்.ஜடேஜா களத்தில் நின்று வெற்றி தேடி கொடுத்து இருக்கிறாரா? என?
அவர் கிரிக்கெட் பார்த்தது அந்த அளவுக்குதான் என புரிந்து கொண்டேன்.
இன்றைய ஜடேஜா இன்னிங்ஸ்ஸை நான் பாராட்டாம இருக்க முடியாது.ரொம்ப ரொம்ப தரமான ஆட்டம் ஆடி விட்டார்.
அணி தோல்விக்கு அவர் காரணமே இல்லை என சொல்லும் அளவுக்கு ஆடி விட்டார்!
ஜெய்ஸ்வால் டக் அவுட் ஒரு காரணமா இருக்கலாம்!
கருண் நாயரோட கவன குறைவு ஒரு காரணமா இருக்கலாம்!
கில் சந்தித்த ஒரு நல்ல ஸ்விங் பந்தில் தன் விக்கெட்டை பறிகொடுத்தது காரணமா இருக்கலாம்!
அணி வெற்றிக்கு 350 ரன்கள் தேவை என்பது போல 150Km பந்தை சரியா கணிக்காம பேட்டை வீசிய பொறுப்பற்ற பண்ட் ரொம்ப ரொம்ப காரணமா இருக்கலாம்!
அணியை காப்பாற்றுவார் என எதீர்பார்த்த ராகுல் ஏமாற்றியது காரணமாக இருக்கலாம்!
பந்துவீச்சில் நேற்று மிரட்டி, பேட்டிங்ல முட்டை போல வாஷி காரணமா இருக்கலாம்.
ரன்னே அடிக்க திணறும் ஒரு அனுபவமில்லாத பேட்ஸ்மேன் நிதீஷ் காரணமா இருக்கலாம்!
ஆனா எந்த விதத்திலும் அணி தோல்விக்கு ஜடேஜா காரணமில்லை! அவர் எப்போதுமே அணி ஜெயிக்க வைக்க பாடுபடுபவர்!
அந்த குணம் அவருக்கு என் தோனி மூலமா வந்தது.சூழ்நிலைக்கு தகுந்தவாறு எந்த நேரத்தில் எப்படி பேட் பண்ண வேண்டூம் என ஜட்டுவுக்கு தோனி வெகுநாட்கள் கற்று கொடுத்து இருக்கிறார்.
தோனி கூட நிறைய போட்டிகளில் ஜடேஜா விளையாடி இருக்கிறார்.ஒவ்வொரு பந்துக்கும் தோனி ஆலோசனை சொல்லி சொல்லி அவரை ஒரு மிகசிறந்த ஆல்ரவுண்டராக மாற்றி வைத்து இருக்கிறார்!
2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் எட்டாவது களம் இறங்கிய ஜடேஜா அரைசதம் அடித்தார்.மறுமுனையில் களத்தில் நின்றது தோனி! எட்டாவது களம் இறங்கி எப்படி விளையாடனும் என ஜட்டுக்கு சொல்லி கொடுத்து அவரை மின்னும் வைரமாக மாற்றி இருக்கிறார்!
இன்று மிகபெரிய ஆல்ரவுண்டராக ஜடேஜா வலம் வருகிறார்! அவரை குறை சொல்ல நாம் யார்?
இந்த தொடரில் தொடர்ந்து 4 முறை அரைசதத்தை கடந்து இருக்கிறார்.ஒரு ஏழாம் நிலை வீரரிடம் இதைவிட வேறென்ன எதிர்பாக்க முடியும்…??
யார் என்ன சொன்னாலும், இங்கி.தொடரில் மிகசிறப்பாக விளையாடி வரும் வீரர் ஜடேஜா மற்றுமே!
உலக அளவில் நம்பர் 1 ஆல்ரவுண்டர்!
இன்னும் 4-5 ஆண்டுகள் அவரால் டெஸ்ட் விளையாட முடியும்.விளையாடுவார்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது!
போராடீய ரவி.ஜடேஜாக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
லார்ட்ஸ் டெஸ்டுல என்னுடைய ஆட்ட நாயகன் ஜடேஜா தான்!
Sankar Jos Sharon #testcricket #ICC #ravindrajadeja #INDvsENG #TeamIndia #cricketlover
✍️சசிக்குமரன்