90களின் மக்களுக்கு 2003 World Cup மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் குடுத்திருக்கும். அது பின்னாடி எதிர்பார்ப்பில்லாம ஆட்டங்களைப் பாக்க ஒரு அனுபவமாவும் இருந்திருக்கும். அந்த final போட்டி வீரர்களை எப்படி பாதிச்சதுன்னு சச்சின் சில விசயங்களை சொல்றார்..
‘நாங்க ரொம்ப உற்சாகத்துல இருந்தோம் நாளைக்கி இறுதிப்போட்டி இதுவரைக்கும் மத்தவங்க ஆடறததான் பாத்துட்டு இருந்தோம். நாளைக்கி நாங்களே ஆடப்போறோம்னு exciting ஆ இருந்தோம்.
காலைல Toss ஜெயிச்சு field பண்ணனும்னு நெனச்சோம். Toss ஜெயிச்சதும் இன்னும் சந்தோசமானோம். ஆனா Zaheer Khan முதல் ஓவர் 15 ரன் குடுத்தார். அதிலிருந்து மீள முடியல. Ponting 140 அடிச்சார். அந்த shot ஒவ்வொண்ணும் பயங்கரமா இருந்தது.
Finalல 300 எடுக்கறதே கஷ்டம். அதுக்கு மேல போறது எல்லாம் double மடங்கு கஷ்டம். நாங்க ஒவ்வொரு ஓவர்லயும் தவறாம ஒரு பவுண்டரி, மீதி 250 பாலுக்கு 160 அடிக்கனும்னு plan போட்டோம். Positive ஆ இருக்க அதான் ஒரே வழியா இருந்தது.
நான் McGrath பந்துல அவுட் ஆனேன். கவனமா ஆடீருக்கனும்னு வருத்தப்பட்டேன். அப்ப லேசா மழை வந்துச்சு. உண்மைல பெரிய மழையா பெய்யாதா.. போட்டி நின்னு போகாதா.. அடுத்த reserve dayல மறுபடியும் போட்டி தொடங்காதான்னு எல்லாம் pray பண்ணீட்டே நடந்துபோனேன். ஆனா மழை வரல.
மேட்ச் முடிஞ்சது. ஆஸி வீரர்கள் ஒருபக்கம் கொண்டாடீட்டிருந்தாங்க. அதைப் பாக்க கஷ்டமா இருந்தது நாங்க சோகமா இருந்தோம். Player of the series Award குடுக்க என் பேரை கூப்பிட்டாங்க. அப்பவும் எனக்கு ஒரு உற்சாகமும் இல்ல. நான் 673 ரன் அடிச்சிருந்தேன் மொத்தமா. ஒரு பேட்டைக் குடுத்தாங்க. ரூமுக்கு வந்து அதை bagக்கு உள்ள வச்சுட்டேன்.
Flight க்கு உள்ள நாங்க யாரும் அதிகமா பேசிக்கல. இன்னும் இந்த தருணத்துக்கு 4 வருசம் காத்திருக்கனும்னு நெனைக்கறப்போ மலைப்பா இருந்துச்சு. வீட்டுக்கு வந்து பையன் பரிசைக் காட்ட சொன்னதும்தான் தெரிஞ்சது அது தங்கத்தாலான அதுவும் முழுசும் கையாலேயே செய்யப்பட்ட batனு. அதைக்கூட கவனிக்காம அவ்ளோ தூரம் கடந்து வந்திருக்கேன். ‘