சச்சின் ரொம்ப அழகா ஒரு விஷயத்தை share பண்ணீருந்தார்.

சச்சின் ரொம்ப அழகா ஒரு விஷயத்தை share பண்ணீருந்தார்.

Nz கூட மேட்ச். நானும் , டிராவிட்டும் களத்துல இருந்தோம். ஆனா நாங்க ஒரு குழப்பத்துல இருந்தோம். ஏன்னா அந்த பௌலர் Chris Cairns என்ன ball வீசறார்னு சுத்தமா கணிக்க முடியல.!

நான் ராகுலை கூப்பிட்டு எனக்கு ஒரு Idea தோணுதுன்னு சொன்னேன். ‘இதோ பார் ராகுல்.. அவன் என்ன போடறான்னு தெரியல, அதனால அவன் பாலை கைல புடிக்கறப்பவே நான் பாத்தர்ரேன். அவன் Out swing போட்டான்னா என் batஐ இடதுபக்கம் வச்சுட்டு நிக்கறேன், Inswing போட்டான்னா வலப்பக்கம் வச்சுக்கறேன்’னு சொன்னேன்.

என் வாழ்நாள்லயே ஒரு batsman பௌலர பாக்காம எதுத்தாப்ல batsmanஐ பாத்து நின்னது அந்த போட்டியாத்தான் இருக்கும். 😂
எங்க plan work out ஆச்சு. Dravid நல்லா அடிக்க ஆரம்பிச்சார். என்னடா நடக்குது இங்கன்னு Chris எப்படியோ கண்டுபுடிச்சுட்டார். இன்னும் கணிக்க முடியாத பாலை போட்டுட்டு இப்ப என்ன செய்வேங்கறமாரி பாத்தார்.

ஆனா அவருக்கு தெரியாது நான் ராகுல்கிட்ட ஏற்கனவே சொல்லீருந்தேன், தோ பாரு ராகுல் .‌. அவன் போடறது என்ன பால்னு எனக்கும் தெரியலைன்னா பேட்டை நடுவால வச்சுட்டு நிப்பேன்னு…’ 😂😂😂😂

SACHIN RAHUL PLAN & EXECUTION. 😍

✍️ Arun Kumar G

Previous articleரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் க்கு வாய்ப்பில்லை…!