விராட் கோலி சோலி முடிஞ்சுது! பேட்டிங் திறன் சுத்தமாக இல்லை! போட்டுத் தாக்கிய முன்னாள் வீரர்

விராட் கோலி சோலி முடிஞ்சுது! பேட்டிங் திறன் சுத்தமாக இல்லை! போட்டுத் தாக்கிய முன்னாள் வீரர்

விராட் கோலியின் பேட்டிங் திறன் குறைந்து விட்டது. இனிமேல் அவரால் சரியாக விளையாட முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் சொதப்பல் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஒரு தைரியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். கோலி தற்போது “தனது பேட்டிங் ஜோனில் இல்லை” என்றும், அவருக்கு ரிதம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

விராட் கோலி டக் அவுட்

மார்ச் மாதம் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய விராட் கோலி, முதல் ஒருநாள் போட்டியில் 8 பந்துகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அடிக்க முயன்று, பேக்வர்டு பாயின்ட்டில் இருந்த கூப்பர் கானோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி குறித்து முகமது கைஃப் கருத்து

இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், ”ஒரு வீரருக்கு ரிதம், பேட்டிங் ஃபார்ம் இருக்கும் வரையிலும், தொடர்ந்து போட்டிகளில் விளையாடும் வரையிலும் தான் அவர் சிறந்த வீரராக இருப்பார். கண்கள் கூர்மையாக இருக்கும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட்டிகளில் விளையாடுவார். அப்படி நடக்கும்போது, பந்து இன்-ஸ்விங்கா அல்லது அவுட்-ஸ்விங்கா என்பதை பந்துவீச்சாளரின் கையிலிருந்தே வீரர் கண்டுபிடித்துவிடுவார்.

கோலி டச்சில் இல்லை

அது யார்க்கரா அல்லது ஸ்லோயர் பந்தா என்பதையும் கணித்துவிடுவார். எனவே, தொடர்ந்து விளையாடும்போதுதான் அதைக் கணிக்கும் திறன் சாத்தியமாகும்… அப்போதுதான் நீங்கள் உங்கள் பேட்டிங் ஜோனில் இருப்பீர்கள். ஆனால் விராட் கோலி தற்போது தெளிவாக தனது பேட்டிங் ஜோனில் இல்லை. அவரிடம் ரிதம் இல்லை, மேலும் அவர் டச்சில் இல்லை, அதனால்தான் கடந்த போட்டியில் ஆட்டமிழந்தார்” என்று தெரிவித்தார்.

ரோகித், கோலிக்கு கைஃப் அட்வைஸ்

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ஸ்கோர்களை எடுக்க கிரீஸில் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்றும் கைஃப் கூறினார். அடிலெய்டு போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஆடம் ஜாம்பா, இந்தியாவுக்கு எதிராக ஒரு சிறந்த சாதனையைக் கொண்டிருக்கிறார் மற்றும் பலமுறை விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பதையும் கைஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிலெய்டில் அசுரத்தனமான பார்மில் விராட்

நாளை 2வது ஓடிஐ நடக்கும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விராட் கோலி இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். அவர் 12 போட்டிகள் மற்றும் 17 இன்னிங்ஸ்களில் 65.00 சராசரியுடன் 975 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்கள், நான்கு அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleAustralia மகளிர் அணி வெற்றி..!
Next articleவிராட் கோலி அடிலெய்டு ஓவலில்