டெல்லி மற்றும் சன் ரைசேர்ஸ் ஹதராவாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய IPL கிரிக்கெட் போட்டி சூப்பர் ஓவர் முறை மூலமாக நிறைவுக்கு வந்துள்ளது .
பான்ட் அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் மிகப்பெரும் பேசுபொருளாக + இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என புகழப்படுகின்றார்.
அதையும் கடந்து இப்போது பான்ட் அணித்தலைவராக தலைமைத்துவ நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை டெல்லி கேப்பிடல்ஸ் அணியினுடைய அவரது தலைமைத்துவம் நமக்கு காட்டி கொண்டிருக்கிறது.
5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்தில் காணப்படுகிறது, தோனி தலைமையிலான சென்னை அணியையே டெல்லி அணி வெற்றி பெற்றருக்கிறது.
இது மாத்திரமல்லாமல் விராட் கோலி தலைமையிலான அணி ,தோனி தலைமையிலான அணி ,பான்ட் தலைமையிலான அணி இந்த மூன்று அணிகளும்தான் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன .
இந்த மூன்று அணிகளும் தலா ஒவ்வொரு தோல்விகளை மட்டுமே பெற்றிருக்கின்றன .
சரி முக்கிய விடயம் என்னவென்றால் இன்றைய சூப்பர் ஓவர் போட்டியில் பாண்ட் 3 பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை இருந்தபோது ,அவர் எதிர்கொண்ட இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டவே முற்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வேளைகளில் அந்த பந்துகளில் அவர் ஆட்டமிழந்து இருப்பாராக இருந்தால் போட்டியின் போக்கு மாறி இருக்கும் ,எந்த கட்டத்தில் எப்படியான துடுப்பாட்ட நுட்பங்களை கைக்கொள்ள வேண்டும் என்பதையும் பான்ட் கற்றுக்கொள்வாராக இருந்தால் அவரை வேறு ஒரு ரூபத்தில் நாம் காணமுடியும் ???
எது எவ்வாறாயினும் தோனி , பான்ட் , கோலி என்று தான்சார்ந்த அணியைக்கொண்டுவந்து பான்ட் நிறுத்தியிருக்கிறார் என்பதே பெரிய சாதனைதான் .
பெயர்ஸ்டோவை வெளியில் வைத்துவிட்டு ,டேவிட் வோர்னர் தான்துடுப்பாட வந்ததை போன்றல்லாது
பான்ட் சூப்பர் ஓவரில் துடுப்பாட்டம் , பந்துவீச்சுக்கு வீரர்களை தேர்வு செய்தது எல்லாம் Bold டிசிஷன் என்பேன் ?
சிங்கிள்ஸ் போதுமானதாக இருக்கின்ற போது சிக்ஸர்கள் அடிக்க நினைப்பதை மட்டும் நிறுத்தினால் வெற்றிகள் வீடுதேடிவரும் ❤️
#Thillaiyampalam Tharaneetharan