2018ஆம் ஆண்டு ஜொகன்னர்ஸ்பேர்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் போல் டெம்பரிங் என்று சொல்லப்படும் பந்தை சேதப்படுத்துகின்ற விவகாரத்தில் ஈடுபட்டனர்.
இதற்குப் பின்னர் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குரியதாகமாற இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் பேரவை ,இந்த வீரர்கள் கிரிக்கெட் ஒழுங்கு விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த கிரிக்கட் அவுஸ்ரேலியா, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைவர் ஸ்மித், உதவித்தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருட தடையையும், இந்த பந்தைச் சேதப்படுத்த பயன்படுத்திய இளம் வீரர் பான்கொரொப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதித்தது.
இப்போது இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவு வந்திருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஆடம் கில்கிறிஸ்ட் உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து ஊடகமொன்றுக்கு கருத்த பான்கொரொப்ட், இந்த விவகாரம் பந்துவீச்சாளர்களுக்கும் தெரிந்திருந்தது எனும் விதமான கருத்தை பகிர்ந்ததை மேற்கோள்காட்டி ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் அவுஸ்திரேலியா இந்தப் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்றும், சரியான தீர்மானத்தை ஒழுங்கு முறைப்படி விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை ஆடம் கில்கிறிஸ்ட் முன்வைத்துள்ளார் .
இப்போது இந்த விவகாரம் பேசு பொருளாக இருக்கின்ற தருணத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரும் இந்த மாதிரியான கருத்தை முன்வைத்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.