இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக அண்மையில் ரமேஷ் பவார் எனும் முன்னாள் இந்திய சகலதுறை வீரர் நியமிக்கப்பட்டிருந்தார் .
இந்த நிலையில் இந்திய மகளிர் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிவ்சுந்தர் தாஸ் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.
2000-2002 காலப்பகுதியில் இவர் இந்தியாவுக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப வீரராக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.