#SLvBAN-பங்களதேஷ் மண்ணில் வெற்றியை ருசிக்க போராடும் இலங்கை-இலகுவான வெற்றி இலக்கு …!

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிகும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டாக்கா மைதானத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

முதலாவது போட்டியில் மிக அபாரமாக விளையாடியும் 33 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவிய நிலையில், தொடரை தக்கவைப்பதற்கு இலங்கை அணிக்கு இன்றைய போட்டியின் வெற்றி அவசியமாகிறது.

 

 

 

இதனடிப்படையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை தமதாக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இரண்டாவது விக்கெட்டை 15 ஓட்டங்களை பெற்ற நிலையில் பங்களாதேஷ் இழந்து தடுமாறியது. இறுதியில் முதல் போட்டியைப் போன்று மிகச்சிறந்த ஆட்டத்தை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்திய முஷ்பிகுர் ரஹீம் 125 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

 

 

 

 

இது இவருடைய 8 வது சத்தமாக அமைந்தது, மஹ்மதுல்லா 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, பங்களதேஷ் 48.1 ஓவர்களில் 246 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. கடந்த போட்டியிலும் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோரே அதிகப்படியான ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பந்துவீச்சில் இசுரு உதான 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லக்ஷன் சந்தகன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹசாரங்க மிகச்சிறப்பாக 33 ஓட்டங்களுக்கு 1 விக்கட் கைப்பற்றினார்.

 

 

 

 

 

 

இலங்கை அணிக்கு 247 எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பங்களாதேஷ் அணி, கடந்த போட்டியில் 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.