போராடி தோற்றது இலங்கை கால்பந்து அணி…!

அடுத்தாண்டு கட்டாரில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ண போட்டிகள் மற்றும் 2023 இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்று வருகின்றது.

தென் கொரியாவின் சியோலில் இடம்பெறும் இந்த போட்டிகளில் இன்று இலங்கை கால்பந்து அணி லெபனான் அணியை சந்தித்தது.

பலம்பொருந்திய லெபனான் அணிக்கு கடுமையான சவாலை காண்பித்த இலங்கை அணி 3 -2 என்று தோல்வியை தழுவியது. ஆனாலும் இலங்கை அணி நீண்ட காலத்துக்கு பின்னர் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

Previous articleபாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க அசாம் கான் செய்த தியாகம் என்ன தெரியுமா- அடடா என்னவொரு அர்ப்பணிப்பு…!
Next articleயூரோ கிண்ண போட்டிகளில் கிண்ணம் வெல்வது யார் ?