கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
முக்கிய பல திருப்பங்களுக்கு மத்தியில் இடம்பெற்று வரும் இந்த போட்டி தொடரில், இன்று இடம்பெறும் முக்கிய அரை இறுதியில் உலக டென்னிஸ் தரவரிசையில் போட்டிபோடும் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் மோதுகின்றனர்.
இருவரும் தமக்கிடையில் டென்னிஸ் போட்டிகளில் மோதும் 58 ஆவது தடவையாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே களத்தில் இறுதிப் போட்டியொன்றில் மோதியிருந்தனர்.
இருவரும் தமக்கிடையே 38 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தக்க வைத்துள்ளனர் என்பது சிறப்பம்சமாகும், ரபெல் நடால் தன்னுடைய 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களிலேயே ,களிமண் தரையின் ராஜா தானே என்பதை நிரூபித்துக் கொண்டு 13 பட்டங்களை தக்க வென்றிருக்கின்றார் என்பது சிறப்பம்சம்.
ஜோகோவிச்சை பொறுத்தவரையில் இவரிடம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் இருக்கின்ற நிலையில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வீரரான ஜோகோவிச், களிமண் தரை என போற்றப்படும் நடாலை இன்று வெற்றிகொண்டு ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இறுதிப்போட்டியில் மோதிவாரா என்று பொறுத்திருந்தே பார்க்கலாம்.