உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், மெகா என்கவுண்டருக்கு விளையாடும் லெவன் அணியை இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளதாக்க தகவல்கள் கசிந்துள்ளன.
இங்கிலாந்து நிலைமைகள் வேகம் மற்றும் ஸ்விங் (Seam & Swing ) பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ரவிச்சந்திரன் அஸ்வினை மட்டும் கொண்டு இந்தியா ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்ற பேச்சுக்கள் முன்னர் நடந்தன.
இருப்பினும், விராட் கோஹ்லி மற்றும் நிர்வாகம் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் 2 சுழல் பந்துவீச்சு கூட்டணியையே கொண்டு விளையாட விருப்பங்களைக் கொண்டிருப்பது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
சவுத்தாம்டன் உள்ள பிட்ச் கியூரேட்டர், சைமன் லீ கருத்துப்படி முதல் மூன்று நாட்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
அதன்படி, இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே நம்பப்படுகின்றது.
நியூசிலாந்திற்கு எதிரான WTC இறுதிப் போட்டிக்கான பந்துவீச்சு தேவையை ரவி சாஸ்திரி மற்றும் நிர்வாகம் இறுதி செய்துள்ள நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து இப்போது பேச்சுவார்த்தைகள் மையம் கொண்டுள்ளன.
இங்கிலாந்தின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்தியாவின் வேகத் தாக்குதலுக்கான இரண்டு முதன்மைத் தேர்வுகள். இருப்பினும், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுக்கும் போது, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோருக்கு இடையே இந்தியா கடுமையாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்த மூவரில், வலது கை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் இஷாந்த் சிறந்த தேர்வாக வெளிவருகிறார், இது அவரது அனுபவம் மற்றும் இங்கிலாந்தின் விளையாட்டு அனுபவத்தை கொண்டு முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
இருப்பினும், கோஹ்லி மற்றும் நிர்வாகம் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மறுபுறம் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் குறித்தும் கவனம் செலுத்துகின்றது.
எது எப்படியாயினும் பிந்திய உள்ளக தகவல்களின் அடிப்படையில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் 2 சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்டே களமிறங்க காத்திருக்கின்றது.
இதில் 3 வது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.