கடந்த கால வலிகளும் இனிமையானது _ வில்லியம்சன் அணியினரின் சுவார்ஷ்ய கதை …!

கடந்த கால வலிகளும் இனிமையானது _ வில்லியம்சன் அணியினரின் சுவார்ஷ்ய கதை …!

கடந்த காலங்களில் இரண்டு ஐ.சி.சி உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்றதன் வலி சவுத்தாம்ப்டனில் அவர்கள் பெற்ற வெற்றியை இன்னும் சிறப்பானதாக ஆக்குகிறது என்று நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார் .

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியாளர்களாக கிவிஸை பதிவுசெய்ய கேன் வில்லியம்சன் புதன்கிழமை பாடுபட்ட வேளையில் ரோஸ் டெய்லர் அவருக்கு பக்க பலமாக இருந்தார் .



இது தொடர்பில் கூறிய கேன் வில்லியம்சன் , நிச்சயமாக இது ஒரு சிறப்பான உணர்வுதான் .

இரண்டு முறை கிண்ணத்துக்கு நெருக்கமாக சென்று கைகூடாமல் இறுதியில் பெரிய கிண்ணத்தை வெல்வது நிச்சயம் சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது .

இறுதிப் போட்டியை வெல்வது தான் உச்சம் இல்லையா ? முதலில் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் . இந்திய அணி ஒரு பிரமாதமான அணி , எத்தனை பெரிய சவால் என்பதை நாங்கள் அறிவோம் .



வெற்றி பெறுவதற்கான உணர்வை தொடர்ந்து தக்க வைத்தோம் , கடைசியில் வென்றோம் . இது ஒரு கிரேட் டெஸ்ட் மேட்ச் . நான் நியூசிலாந்து கிரிக்கெட்டுடன் குறுகிய காலம் தான் இருந்து வருகிறேன் , அதனால் இது ஸ்பெஷல் ஃபீலிங் . எங்கள் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் என்ற பட்டம் பெறுகிறோம் .

கடந்த 2 ஆண்டுகளில் 22 வீரர்கள் அணிக்காக ஆடியுள்ளனர் , அவர்களின் பங்களிப்பு , உதவிப்பணியாளர்கள் , பயிற்சியாளர்கள் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை . பாதுகாப்பதற்குரிய சிறந்த தருணமாகும் இது என்றார் .

புதன்கிழமை சவுத்தாம்ப்டனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் அதிகாரப்பூர்வ உலக சாம்பியனான நியூசிலாந்து இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததை அடுத்து , விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஒரு சிறந்த நட்பைப் பகிர்ந்து கொண்டனர் .

கோஹ்லி மற்றும் வில்லியம்சன் தங்கள் யு -19 நாட்களில் இருந்து ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறார்கள் , மேலும் இரண்டு வருட ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலப் பகுதியிலும் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர் .

நியூசிலாந்து 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு எட்டு முறை சென்றுள்ளது . இரு ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் இரு முறை இறுதிப் போட்டியில் கால் பதித்தது . 2019 ஆம் ஆண்டு உலக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி முடிவுகளால் நியூஸிலாந்து அணியின் மனம் உடைந்தது .

தற்போதைய வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது .



கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் , இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது .

இதற்கு முன்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியதே சர்வதேச அரங்கில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பட்டமாக பார்க்கப்பட்டது . தற்சமயம் அந்த விதியானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது .



இந் நிலையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு விராட் கோலி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

இந்த போட்டியே நியூசிலாந்து விக்கெட் காப்பாளர் பி.ஜே.வாட்லிங்கின் வாழ்க்கையின் இறுதி டெஸ்ட் ஆகும் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான ஓட்டப்பந்தயத்தில் அணிக்கான அவரது பங்களிப்பும் அளப்பரியது .