ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்து அசைக்கமுடியாத முதலிடத்தை எட்டிப்பிடிக்க போராடும் இலங்கை அணி ..!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நிறைவிற்கு வந்தது.
இந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் அகராதிியில ஓர் சரித்திர சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது .

இதுவரைக்குமான ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் தழுவிய அணியாக இந்திய அணி காணப்படுகின்றது.
இந்திய கிரிக்கெட் அணி 993 போட்டிகளில் பங்கெடுத்து 427 தோல்விகளை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 859 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை அணி 427 வது தோல்வியை பெற்றுக்கொண்டு, இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்துள்ளது .

இங்கிலாந்துடன் இன்னும் இரண்டு போட்டிகளும், அடுத்து இந்தியாவுடனும் ஒருநாள் தொடர் இருக்கும் நிலையில் நிச்சயமாக இந்த பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தை பெற்று உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதே இலங்கை ரசிகர்களின் இப்போதைய மிகப் பெரிய கவலையாக காணப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில், உலகக் கிண்ணம் எல்லாவற்றையும் வெற்றி கொண்ட முதல்தர அணியாக இலங்கை அணி வலமவந்த்து.
இப்போது மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல்தர அணியாக தோல்விகளில் முதலிடம் பிடிக்கவுள்ளது.
427 – SRI LANKA ?? ***
427 – India ??
414 – Pakistan ??️
384 – West Indies ?️
375 – Zimbabwe ??
374 – New Zealand ??
339 – England ???????
333 – Australia ??
245 – Bangladesh ??
218 – South Africa ??
#ENGvSL

| Team | Mat | Won | Lost | Tied | NR | % | |
|---|---|---|---|---|---|---|---|
| Afghanistan | 2009-2021 | 129 | 62 | 63 | 1 | 3 | 49.6 |
| Africa XI | 2005-2007 | 6 | 1 | 4 | 0 | 1 | 20 |
| Asia XI | 2005-2007 | 7 | 4 | 2 | 0 | 1 | 66.66 |
| Australia | 1971-2020 | 955 | 579 | 333 | 9 | 34 | 63.35 |
| Bangladesh | 1986-2021 | 385 | 133 | 245 | 0 | 7 | 35.18 |
| Bermuda | 2006-2009 | 35 | 7 | 28 | 0 | 0 | 20 |
| Canada | 1979-2014 | 77 | 17 | 58 | 0 | 2 | 22.66 |
| East Africa | 1975-1975 | 3 | 0 | 3 | 0 | 0 | 0 |
| England | 1971-2021 | 756 | 380 | 339 | 9 | 28 | 52.81 |
| Hong Kong | 2004-2018 | 26 | 9 | 16 | 0 | 1 | 36 |
| ICC World XI | 2005-2005 | 4 | 1 | 3 | 0 | 0 | 25 |
| India | 1974-2021 | 993 | 516 | 427 | 9 | 41 | 54.67 |
| Ireland | 2006-2021 | 167 | 70 | 86 | 3 | 8 | 44.96 |
| Kenya | 1996-2014 | 154 | 42 | 107 | 0 | 5 | 28.18 |
| Namibia | 2003-2020 | 14 | 5 | 9 | 0 | 0 | 35.71 |
| Nepal | 2018-2020 | 10 | 5 | 5 | 0 | 0 | 50 |
| Netherlands | 1996-2021 | 85 | 34 | 47 | 1 | 3 | 42.07 |
| New Zealand | 1973-2021 | 775 | 354 | 374 | 7 | 40 | 48.63 |
| Oman | 2019-2020 | 11 | 8 | 3 | 0 | 0 | 72.72 |
| Pakistan | 1973-2021 | 933 | 490 | 414 | 9 | 20 | 54.16 |
| Papua New Guinea | 2014-2019 | 27 | 7 | 20 | 0 | 0 | 25.92 |
| Scotland | 1999-2021 | 117 | 43 | 67 | 1 | 6 | 39.18 |
| South Africa | 1991-2021 | 628 | 386 | 218 | 6 | 18 | 63.77 |
| Sri Lanka | 1975-2021 | 859 | 390 | 427 | 5 | 37 | 47.74 |
| United Arab Emirates | 1994-2021 | 61 | 18 | 43 | 0 | 0 | 29.5 |
| United States of America | 2004-2020 | 15 | 6 | 9 | 0 | 0 | 40 |
| West Indies | 1973-2021 | 828 | 404 | 384 | 10 | 30 | 51.25 |
| Zimbabwe | 1983-2020 | 532 | 138 | 375 | 8 | 11 | 27.25 |






