இலங்கை கிரிக்கெட்டின் ஒழுக்காற்று பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு முதலில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியது குறித்து விசாரிக்கும்.
டேர்ஹாமில் உயிர் குமிழியை (,Bio Bubble ) மீறியதற்காக குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
டேர்ஹாமின் தெருக்களில் மெண்டிஸ் மற்றும் டிக்வெல்ல சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து இந்த மூவரும் இங்கிலாந்து சுற்றுலாவில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடப்பட்டனர்.
இந்த மூவரும் ஜூன் 29 ஆம் தேதி கொழும்பை வந்தடைந்தனர், ஜூலை 13 ஆம் தேதிக்குப் பிறகு விசாரணையை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கிரிக்கெட் வீரர்களும் நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் ஐந்து பேர் கொண்ட ஒழுக்காற்றுக் குழுவை எதிர்கொள்ள உள்ளனர்.
ஒழுங்கு விசாரணையை நடத்தும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு: முன்னாள் STF தலைமை ஓய்வுபெற்ற மூத்த DIG எம்.ஆர்.லதீஃப் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக உள்ளார்.
திரு. அஜித் வீரசிங்க (தலைவர்)
திரு.நிரோஷன் பெரேரா
திரு. நலிந்த இளங்ககூன்
திரு அனுரா சந்திரசிரி
திரு எம்.ஆர் லத்தீப்