மீண்டும் தலைமைத்துவ மாற்றம்_ இந்திய தொடருக்கு புதிய தலைவரை தேர்வு செய்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் ..!

மீண்டும் தலைமைத்துவ மாற்றம்_ இந்திய தொடருக்கு புதிய தலைவரை தேர்வு செய்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் ..!

இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தவான்  தலைமையிலான இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடருக்கு புதிய தலைவரை பெயரிட்டுள்ளது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்.

 

திமுத் கருணாரத்னவை நீக்கிவிட்டு தலைமைத்துவ மாற்றம் மேற்கொண்டு பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இலங்கை அணி, அங்கு அடைந்த தோல்விகள் மூலமாக மீண்டும் ஒரு தலைமைத்துவம் மாற்றத்திற்கு முயற்சித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரைக்கும் தலைவராக இருந்த குசல் பெரேரா நீக்கப்பட்டு தசுன் சானக அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.