கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படும் இன்னுமொரு உலக T20 தொடர்….!

குளோபல் T20 என்று அழைக்கப்படும் கனடாவின் 2021 தொடர் கொரோனா தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட வேண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போட்டியின் மூன்றாவது பதிப்பை நடத்த அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் காரணமாக அது ஒரு வருடம் பின்தள்ளப்பட்டது.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில் மலேசியாவில் ஜூன்-ஜூலை மாதங்களில் போட்டியை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது இந்த திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

குளோபல் T20 கனடா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், ‘கிரிக்கெட் கனடா’ வின் தலைவர் ராஷ்பால் பஜ்வா துரதிர்ஷ்டவசமாக இந்த போட்டியை நடத்தமுடியாத்தால்  ஏமாற்றமடைவதாக தெரிவித்தார் ,ஆயினும் 2022 இல் போட்டி மீண்டும் வரும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் திறமையாளர்களுடனர , சில பெரிய வெளிநாட்டு நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், ஷாஹிட் அஃப்ரிடி, லசித் மாலிங்க, டேவிட் வோர்னர், டேரன் சமி, ஃபாஃப் டு பிளெசிஸ் , கீரோன் பொல்லார்ட், சுனில் நரைன், ஜார்ஜ் பெய்லி, பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் போட்டியில் முன்னர் பங்கேற்றவர்ரகள் என்பதும் கவனிக்கத்தக்கது.

2018 ஆம் ஆண்டில் லீக்கின் முதல் கிண்ணத்தை ‘வான்கூவர் நைட்ஸ்’ அணி வென்றது, ‘வின்னிபெக் ஹாக்ஸ்’ அடுத்துவந்த 2 வது தொடரை வென்ற நிலையில் 3 வது தொடரே சிக்கலில் மாட்டித்தவிக்கிறது.

Previous articleஇலங்கை கிரிக்கட் வீரருக்கும் கொரோனா – இன்னும் சிக்கலாகும் இந்திய தொடர்..!
Next articleஇரண்டாவது தடவையாகவும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட இலங்கை-இந்திய தொடர், புதிய திகதிகள் அறிவிப்பு..!