ஏறக்குறைய ஒரு மாத விறுவிறுப்பான போட்டிகளுக்கு பிறகு, யூரோ 2020 ன் வெற்றியாளர் யார் என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சாம்பியனை தேர்வு செய்யும் இறுதிப்போட்டி இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நள்ளிரவு 12.30 க்கு இடம்பெற்றுள்ளது.
இத்தாலி எதிர்பார்ப்புகளை மீறி யூரோ 2020 இன் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது. போட்டிகளில் இன்னும் ஒரு ஆட்டத்தையும் தோற்காத ஒரே அணி அவர்கள்தான். மறுபுறம், மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு இங்கிலாந்து வேகத்தை எடுத்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.
காலிறுதியில் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்துவதற்கு முன், ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி Round 16 போட்டிகளில் ஜெர்மனியை தோற்கடித்தது.
டென்மார்க்குககு எதிரான அரையிறுதியில் அவர்கள் அபார வெற்றியும் கண்டு 55 ஆண்டுகளுக்குப் பின்னர் முக்கிய கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.
11 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் இங்கிலாந்துக்கு எதிராக இத்தாலி சற்று சிறந்த சாதனையைப் படைத்துள்ளது,
இத்தாலி vs இங்கிலாந்து Head- Head
விளையாடியது: 30
இத்தாலி வென்றது: 11
இங்கிலாந்து வென்றது: 8
Draw: 11
இத்தாலி vs இங்கிலாந்து (Final)
இடம்: வெம்ப்லி, லண்டன்
நேரம்: காலை 12:30 மணி (IST)
இத்தாலி எதிர்பார்க்கும் XI (4-3-3):
கியான்லூகி டோனாரும்மா; எமர்சன் பால்மெரி, ஜியார்ஜியோ சியெலினி, லியோனார்டோ போனூசி, ஜியோவானி டி லோரென்சோ; ஜோர்கின்ஹோ, மானுவல் லோகடெல்லி, நிக்கோலோ பரேல்லா; ஃபெடரிகோ சிசா, லோரென்சோ இன்சைன், சிரோ இம்மொபைல்
இங்கிலாந்து எதிர்பார்க்கும் XI (4-2-3-1):
ஜோர்டான் பிக்போர்ட்; கைல் வாக்கர், ஹாரி மாகுவேர், ஜான் ஸ்டோன்ஸ், லூக் ஷா; டெக்லான் ரைஸ், கால்வின் பிலிப்ஸ்; மேசன் மவுண்ட், புக்காயோ சாகா, ரஹீம் ஸ்டெர்லிங்; ஹாரி கேன்