இலங்கை கிரிக்கெட் அணிக்குள் கால்பதிக்கும் தமிழர்…!
இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய கணினி தரவு ஆய்வாளராக பிரட் நவரத்னத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது. இது இலங்கை-இந்தியா மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் தரவு ஆய்வாளரான ஜி.டி. நிரூஷன் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
34 வயதான பிராட் நவரத்னம், முன்பு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெஸ்ட் டைகர்ஸ் அணியின் கணினி தரவு ஆய்வாளராக பணியாற்றினார். இந்த நியமனம் கணினி தரவு ஆய்வாளராக அவரது முதல் தேசிய அணியொன்றுடனான நியமனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடர் வரும் 18 ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.