யூரோ கிண்ண இறுதி போட்டி- பெனால்ட்டி ஷூட் அவுட் ( முழுமையான காணொளி)
கடந்த ஒரு மாதமாக கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்ட மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான யூரோ கிண்ண போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இறுதி போட்டியில் போட்டியை நடத்திய இங்கிலாந்து அணியை தோற்கடித்து இத்தாலி அணி சாம்பியன் மகுடம் சூடியது, நேற்று இடம்பெற்ற போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலமாக இத்தாலி அணி 3-2 என வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் 2 பெனால்டி வாய்ப்புக்களை அதி அற்புதமாக இத்தாலி அணியின் கோல் காப்பாளர் Donnarumma தடுத்தார். அத்தோடு ஒரு பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது.
இங்கிலாந்தின் புகாயோ சாகா , ஜடோன் சன்சோ ,மார்கஸ் ராஷ்போர்ட் ஆகிய வீரர்கள் கோல் வாய்ப்புக்களை வீணடித்தமை கவனிக்கத்தக்கது.
முழுமையான வீடியோ.