இந்திய, இலங்கை தொடர் திகதிகள் மட்டுமல்ல நேரத்திலும் வரும் மாற்றம்…!
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகளின் ஆரம்பிக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூலை 18 ஆம் தேதி கொழும்பின் ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரம் மதியம் 1.30 மணி இப்போது பிற்பகல் 3.00 மணியாக்கப்பட்டுள்ளதுடன் , இரவு 7.30 க்கு ஆரம்பிக்கும் இருபதுக்கு 20 போட்டிகள் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இன்று (13) ஆரம்பிக்கவிருந்த இந்த போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 18 க்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருத்தப்பட்ட அட்டவணை
ஒருநாள் போட்டிகள்
முதல் போட்டி – ஜூலை 18 மாலை 3.00 மணி
இரண்டாவது போட்டி – ஜூலை 20 மாலை 3.00 மணி
மூன்றாவது போட்டி – ஜூலை 23 மாலை 3.00 மணி
இருபதுக்கு -20 போட்டி
முதல் போட்டி – ஜூலை 25 இரவு 8.00 மணி
இரண்டாவது போட்டி – ஜூலை 27 இரவு 8.00 மணி
மூன்றாவது போட்டி – ஜூலை 29 இரவு 8.00 மணி