கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாது பயன்படுத்திக்கொள்பவர்களே சிறந்த வீரர்கள்.
நேற்றைய இலங்கை இந்திய போட்டி ஒரு பாடம் ஆம் இந்திய அணி ஆதரவாளர்கள் மட்டும் இன்றி cricket ரசிகர்களும் பெரிதும் பாராட்டப்பட்டது Deepak Chakar batting, உண்மை தான் போட்டி அனுபவமே இல்லாத ஒரு பந்து வீச்சாளர் ஒருவர் போட்டியை துடுப்படுத்தாடி முடித்தது. பலரும் எதிர்பார்த்தது இந்த match ஐ பாண்டியா brothers தான் முடிப்பார்கள் இல்லை bhuvi இணைந்து இருப்பார் என்று எல்லோரும் நினைத்த வேளை எல்லாவற்றையும் மாற்றியவர் Deepak chakar.
அதே போலவே SKY கிடைத்த வாய்ப்பை கொண்டு அரைசதம் நேற்றைய போட்டியில். MI இல் விளையாடும் போது ஒரு போட்டி நான் நின்று முடிப்பேன் என்ற அந்த செய்கை ஆரம்பத்தில் வந்து போனது.நேற்றைய போட்டியில் ஆனாலும் அவரால் முடியவில்லை என்றாலும் ஆரம்பத்தில் அவர் பங்களிப்பு பெரிதும் உதவியது எனலாம்.
இதே போல் முதல் போட்டியில் இஷான் கிசான், ஷா என்பவர்கள் திறமையை நிரூபித்து இருந்தார்கள்.
இந்திய அணி எதிர்வரும் T20 உலக கிண்ண அணியில் தெரிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியாது, 2007 ஐ போலவே do or die மூத்த வீரர்களுக்கு ஓய்வை வழங்கி இளம் வீரர்களை try பண்ணிபார்கலாம்.
இலங்கை அணியை பொறுத்த வரை சர்வதேச cricket போட்டி அனுபவம் குறைந்த வீரர்கள் என்றாலும் decent and comfortable ஆன ஒரு விளையாட்டை விளையாடி இருந்தார்கள்.
Wanindu தற்போதைய இலங்கை அணிக்கு கிடைத்த cricket சொத்து. Performance வேற லெவல். 3 ஆவது ஓவரை spinner அதுவும் அனுபவம் குறைந்த ஒருவர் வீசுவது என்பது கஷ்டம் அதிலும் ஒரு விக்கெட். நல்ல ஒரு பெறுதி வாய்ப்பை தொடர்ந்தும் நல்ல முறையில் பயன்படுத்தி தன்னை மேலே கொண்டு செல்கிறார்.
Cahamika karunarathne மாஸ்டர் கிளாஸ் performance ரெண்டு மட்ச்லயும் last ten overs la என்னதான் world class bowler ஆக இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்து இருந்தார். பந்து வீச்சிலும் அசத்தி இருந்தார். இவரும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி இருந்தார்.
பெரிதும் குறை சொல்லும் அளவிற்கு யாரது performance உம் இல்லை. ஏன் என்றால் அனுபவம் இல்லாத தலைவன், அனுபவம் குறைந்த வீரர்கள். நேற்று அந்த இடத்தில் ஒரு அனுபவ வீரர் பேருக்கு அணியில் இருந்திருந்தாலும் இலங்கை வென்றிருக்கும்.
இந்த தலைவனை மாத்தாது கொஞ்ச காலம் match யும் team யும் அவன் கையில் வழங்கினால் மாற்றங்களை எதிர் பார்க்க முடியும். இந்த அணியின் குறையே ஒரு Senior plyer இல்லை என்பதே Mathews, Malinga, Dimuth இவர்களில் ஒருவன் இருந்திருந்தால் போட்டியின் போக்கு மாறி இருந்திருக்கும்.
T20 உலக கிண்ண அணியில் இவர்களுடன் ஒரு சில Senior வீரர்களும் இருந்தால் knockout stage வரை முன்னேறும் என்று நம்பிக்கை கொள்ள முடியும்.
சஹார் ,தோனி வளர்த்த CSK பையனல்லவா அப்படியானவனுக்கு தோனியைப் போல் பினிசிங் சொல்லியா கொடுக்க வேண்டும் ?
#சந்துரு வரதராசன்