5 அறிமுக வீரர்களுடன் களம் காணும் இந்தியா- ஹசரங்க இல்லாமல் பலவித மாற்றங்களோடு இலங்கை..!

5 அறிமுக வீரர்களுடன் களம் காணும் இந்தியா- ஹசரங்க இல்லாமல் பலவித மாற்றங்களோடு இலங்கை..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிின மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் தவான் முதலில் துடுப்பெடுத்தாடும் விருப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி சார்பில் ஐந்து அறிமுகங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, இரண்டாவது போட்டியில் விளையாடிய அணையில் இருந்து 6 வீரர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 6 வீரர்களுள் 5 வீரர்கள் புதுமுக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஹசரங்க உபாதை காரணமாக விளையாடாத நிலையில் ,அவருக்கு பதிலாக ரமேஷ் மென்டிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோன்று பிரவீன் ஜெயவிக்ரம,  அகில தனஞ்சய  ஆகிய வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.முன்னதாக இடம்பெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா இலகுவான வெற்றியை பெற்று தொடரை தனதாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.