இலங்கையுடனான T20 தொடரை தவற விடுவார்களா சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ?- BCCI தகவல் என்ன ?

இலங்கையுடனான T20 தொடரை தவற விடுவார்களா சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ?- BCCI தகவல் என்ன ?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நா(25) ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டுவென்டி-20 தொடரை தவற விடும் அபாய நிலையை இந்தியாவின் இளம் நட்சத்திரங்களான பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எதிர்நோக்கியுள்ளனர்.

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியக் குழாமில் மூன்று வீரர்கள் உபாதை அடைந்துள்ளதால், அந்த மூன்று வீரர்களுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் ,ஷா,  ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் தரப்பு நடவடிக்கை மேற்கொள்கிறது.

எது எவ்வாறாயினும் இந்திய கிரிக்கெட் தரப்பு PTI செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை தொடரின்  நிறைவின் பின்னரே இவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணம் படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதையும் தாண்டி இன்னும் ஒரு இந்திய ஊடகம் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்குள் இந்த மூன்று வீரர்களும் (சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரித்வி ஷா) ஆகிய வீரர்கள் இங்கிலாந்து நோக்கி பயணப்படுவார்கள் எனும் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ஆனாலும் பிந்திய செய்திகளின் அடிப்படையில் சூரியகுமார் ,ஷா ஆகிய இருவரும் இலங்கைை தொடரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரே இங்கிலாந்து நோக்கி பயணப்படுவர் என்றும் நம்பகமான செய்திகள் குறிப்பிடுகின்றன.

ரஹானே உபாதைகளால் அவதிப்படும் நிலையில் அவருக்கு மாற்று வீரராகவே சூரியகுமார் அழைக்கப்படுகிறார், ஆரம்ப வீரர் கில் உபாதையால் இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக பிரித்வி ஷா அணியில் இணைக்கப்படவிருக்கிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னதாக சுப்மான் கில், வொஷிங்டன் சுண்தர் ,அவேஷ் கான் ஆகிய மூன்று வீரர்களும் இங்கிலாந்து தொடரில் உபாதைக்கு உள்ளாகி உள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜெயந்த் யாதவ்