அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி…!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது.
2-வது போட்டி முன்னதாக (22) இடம்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு Toss நிறைவுக்கு வந்த நேரத்தில் திடீரென கொரோனா தொற்று உடையவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இந்த இரண்டாவது போட்டியில் மிக சிறப்பாக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது.
முதலாவது போட்டியில் 132 ஓட்டங்களால் தோல்வியை தழுவிய மேற்கிந்திய தீவுகள், மூன்று விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
ஒரு கட்டத்தில் 46 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, ஆஸ்டன் அகருடைய சகோதரர் வெஸ் அகர் மிகச் சிறப்பாக 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், அடம் சம்பா 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க ஆஸ்திரேலியா 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
188 எனும் வெற்றி இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் விரைவாகவே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, ஆயினும்கூட நிக்கோலஸ் பூரானின் அற்புதமான துடுப்பாட்டத்தின் துணையோடு நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இப்போது தொடர் 1-1 என்ற நிலைக்கு வந்துள்ளது.