குருனால் பாண்டியவுடன் நேரடித் தொடர்பில் இருந்த 8 பேர் யார் தெரியுமா ? முதல் தெரிவு அணியின் நான்கு வீரர்கள் உள்ளடக்கம் ..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இடம்பெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாண்டியாவுடன் நேரடியான தொடர்பிலிருந்து 8 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் ,அந்த 8 வீரர்களும் இன்றைய போட்டியில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.
இந்திய கிரிக்கெட் சபை இதுவரைக்கும் அந்த 8 வீரர்களும் யார் எனும் செய்திகளையும் உறுதிப் படுத்தி வெளியிடவில்லை, ஆனால் டைம்ஸ் ஒப் இந்தியா என்னும் இந்திய ஊடகம் அந்த வீரர்கள் யார் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது.
பாண்டியா சகோதரர்கள் இது மாத்திரமல்லாமல் சூரியகுமார் யாதவ் ,இஷன் கிஷன் ,பிரித்வி ஷா, தெவுதுட் படிக்கல் ,கிருஷணப்பா கௌதம் ஆகிய வீரர்கள் நேரடி தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ஆகவே இந்த வீரர்களால் இலங்கையுடனான 2வது மற்றும் 3வது டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
முதலாவது போட்டியில் விளையாடிய அணியில் இடம்பெற்ற முதல் தெரிவு வீரர்களில் நால்வர் இவ்வாறு நேரடித் தொடர்பு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.