பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் , 100 M தங்கம் இத்தாலிக்கு..!
டோக்கியோவில் இடம்பெற்றுவரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் நிலைநாட்டி வருகிறது.
ஒன்பதாவது நாளான இன்றைய நாள்வரை சீனா மொத்தமாக 24 தங்க பதக்கங்களை பெற்று முதலிடத்தை சுவீகரித்துள்ளது.
இத்தாலி இன்றைய நாளில் இரண்டு தங்கபதக்கங்கள் தன் வசப்படுத்தியது. 100 மீட்டர் ஆடவர் ஓட்டப் போட்டியில் புதிய நாயகனாக ஜெகாப்ஸ் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார் .இது மாத்திரமல்லாமல் உயரம் பாய்தலில் இன்று இத்தாலிக்கே தங்கபதக்கம் கிடைத்தது.
இத்தாலி மொத்தமாக நான்கு தங்கபதக்கங்களை இன்றைய நாள்வரை பெற்றுக்கொண்டமை கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் சிந்துவுக்கு இன்று பேட்மின்டன் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது, இந்தியா இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு மொத்த பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதக்கப் பட்டியல் கீழே ???