அமெரிக்க அணியில் இணையும்  இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் யார் ?

அமெரிக்க அணியில் இணையும்  இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் யார் ?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அண்மைக் காலமாக அமெரிக்க தேசிய நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற செயல்பாடுகளை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

முன்னதாகவே ஷெஹான் ஜயசூரிய அமில அபோன்சோ ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து அமெரிக்க தேசிய அணியில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் நான்கு வீரர்கள் இலங்கை தேசிய அணிக்கு விடைகொடுத்து அமெரிக்காவில் இணைந்திருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா, இசுரு உதான இவர்களோடு தனுஷ்க குணதிலக ஆகியோரும் இணையவிருப்பதாக அண்மைய நாட்களாக செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கிறன.

இந்த நிலையில் 4-வது வீரராக இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஒருவரும் விரைவில் ஓய்வை அறிவித்துவிட்டு, அமெரிக்க அணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

ஆக மொத்தத்தில் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என பரபரப்பான செய்திகள் கிடைக்கின்றன.