உலகக்கிண்ண வெற்றிகளை குறைத்து கருத்திட்ட காம்பீர், மீண்டும் வெடிக்கும் சர்ச்சை..!

 உலகக்கிண்ண வெற்றிகளை குறைத்து கருத்திட்ட காம்பீர், மீண்டும் வெடிக்கும் சர்ச்சை..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த கௌதம் கம்பீர் இன்று தெரிவித்திருக்கும் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

2007ஆம் ஆண்டு 2011ம் ஆண்டு ஆகியவற்றில் தோனி தலைமையில் இந்தியா உலக கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு பிரதானமான காரணமாக இருந்த கம்பீர் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார்.

ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் இன்று(5) ஜெர்மனியில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது .

இதன் அடிப்படையில்  1983, 2007, 2011 ஆகிய காலகட்டத்தில் இந்தியா பெற்றுக்கொண்ட கிரிக்கெட் உலகக் கிண்ணங்களை விடவும் இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றி என ஒலிம்பிக் வெற்றியை புகழ்ந்து கம்பீர் பதிவிட்டார்.

இதன் அடிப்படையிலேயே ரசிகர்கள் இதற்கு ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக விக்கட் காப்பாளராக தோனி இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்ததைப் போன்று, ஹொக்கி போட்டிகளில் கோல் காப்பாளர் இந்தியாவிற்கு இன்னும் ஒரு கிண்ணத்தை வென்று கொடுத்ததாகவும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.