இரண்டாம் நாளில் சொதப்பிய இந்தியா, அண்டேர்சன் அச்சுறுத்த எழுந்தது இங்கிலாந்து…!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகின்றது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் முதல் நாளில் 183 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் 97 ஓட்டங்கள் இணைப்பாட்டம் புரிந்தனர். ஆயினும் அதன்பின்னர் வந்த புஜாரா ,கோலி, ரஹானே ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் நடையை கட்டினர்.
ஆண்டர்சன் புஜாரா மற்றும் கோலி ஆகியோரை ஒரே ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் ஆடுகளம் விட்டு அகற்றினார்.
இறுதியில் மழையால் போட்டி நிறுத்தப்படும்வரை இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்.