பெருந்தொகைப் பரிசை அறிவித்தது இந்திய கிரிக்கெட் சபை…!

பெருந்தொகைப் பரிசை அறிவித்தது இந்திய கிரிக்கெட் சபை…!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற வீர வீராங்கனைகளை கௌரவித்து, ஊக்கப்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் சபை அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதன் அடிப்படையில் இந்தியாவிற்கு இன்று சனிக்கிழமை 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்தன.

இதனடிப்படையில் இந்த வீர, வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் சபை பரிசுத்தொகையை அறிவுத்துள்ளது.

தங்கப்பதக்கத்தை சுவீகரித்த நீராஜ் சொப்ராவிற்கு ஒரு கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது மாத்திரமல்லாமல் வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த வீரர்களுக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும், வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்த வீர, வீராங்கனைகளுக்கு 25 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டன .

அத்தோடு இந்தியாவிற்கு நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பின்னர் ஹாக்கி போட்டிகளில் வெண்கலப் பதக்கம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது, இதனடிப்படையில் ஹாக்கி அணிக்கு ஒரு கோடி 25 லட்சம் பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். சோப்ராவைத் தவிர, வெள்ளிப் பதக்கம் வென்ற வெயிட் லிஃப்ட்டர் மீராபாய் சானு மற்றும் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா ஆகியோருக்கு தலா ரூ .50 லட்சம். மற்றும் ரூ. வெண்கலப் பதக்கம் வென்ற பட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, குத்துச்சண்டை வீரர் லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா 25 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா இதனை இன்றைய நாளில் அறிவித்திருக்கிறார்.