பங்களதேஷ் மண்ணில் ஆறுதல் வெற்றியை பெற்றுது அவுஸ்ரேலியா, தொடர்ந்து 5 தொடர்  இழப்பு..!

பங்களதேஷ் மண்ணில் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொண்டது அவுஸ்ரேலியா, தொடர்ந்து 5 தொடர்  இழப்பு..!

பங்களாதேஷ்  கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இடம் பெற்று வருகிறது.

இன்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் போராட்டத்துக்கு மத்தியில்  வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றுக்கொண்டது.

ஏற்கனவே முதல் 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலிய அணி,  3-0  என தொடரை இழந்துள்ள நிலையில் இன்று 4-வது போட்டியில் போராட்டத்தில் வெற்றி கிடைத்தது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

105 எனும் இலகுவான இலக்கை கூட அவுஸ்ரேலிய அணி பெறுவதற்கு  7 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையிலேயே 19 ஓவர்கள் நிறைவில் ஆஸ்திரேலியா வெற்றியை பெற்றுக்கொண்டது.

ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரில் 5 சிக்சர்கள் அடங்கலாக டானியல் கிரஸ்டியன் 30 ஓட்டங்களை பெற்று அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தும் அவுஸ்ரேலியா இந்தளவு தூரம் நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அவுஸ்திரேலிய அணி அண்மை காலமாக இடம்பெற்ற இருபது-20 தொடர்களில் 5 தொடர்களை அடுக்கடுக்காக இழந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதன் காரணத்தால் T20 உலகக்கிண்ண போட்டிகள் வருகின்ற நிலையில் அவுஸ்ரேலியாவின் இந்த மோசமான வெளிிப்பாடுகளும் அவுஸ்ரேலிய ரசிகர்களுக்கு உலக்கிண்ணம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.