ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மே மாதத்தில் அவிஷ்க குணவர்தனவை இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததுடன், அவர் கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் ஈடுபட அனுமதிக்கப்படுவதாகவும் அறிவித்தது.
குணவர்தன, ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார், அவர் ICC யால் தடை செய்யப்படுவதற்கு முன்பு இலங்கை A கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் போராளிகள், முன்பு இருந்ததைப் போலவே கிரிக்கெட் தொடரலாம் என்று அறிவித்திருக்கும் நிலையில் அவிஷ்க குணவர்தனவின்்் நியமனம் அமைந்துள்ளது.
ஹேரத் பங்களாதேஸ் சுழல் பந்து பயிற்சியாளராகவும் , திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2 மாதத்தில் 3 வது இலங்கையராக வெளிநாட்டு பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.