செல்சியின் மிட்ஃபீல்டர் ஜார்ஜினோ- ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு ,விருதுகளை அள்ளிய செல்சி..!

செல்சியின் மிட்ஃபீல்டர் ஜார்ஜினோ- ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு ,விருதுகளை அள்ளிய செல்சி..!

இந்த சீசனின் சாம்பியன்ஸ் லீக் குழு நிலைப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட நாளில் UEFA அவர்களின் வருடாந்த விருதுகளை அறிவித்துள்ளது.

அதன்படி செல்சி அணி UEFA விருதுகளில் ஆதிக்கம் செலுத்தியது, ஜார்ஜினோ அணியின் சக வீரர்  N’Golo Kante மற்றும் Kevin De Bruyne ஆகியோரைத் தோற்கடித்து ஆண்டின் சிறந்த ஆண் வீரராக தேர்வானார்.

இத்தாலி கால்பந்தாட்ட அணி அண்மையில் யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கும், செல்சி அணி சாம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரில் கிண்ணத்தை வெல்வதற்கும் ஜார்ஜினோ வின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பலோன் டி’ஓருக்கான போட்டியில் ஜார்ஜினோ இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

செல்சியின் கான்டே பருவத்தின் சிறந்த மிட்ஃபீல்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார், செல்சி கீப்பர் எட்வார்ட் மெண்டி கோல்கீப்பர்களுக்கான விருதையும், செல்சி முகாமையாளர் தாமஸ் துச்செல் ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் விருதையும் வென்றனர்.