துருக்கியின் இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற UEFA விருது விழாவில் 2020-21 பருவத்தின் சிறந்த கால்பந்து வெற்றியாளர்களை UEFA அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கின் அடுத்த சீசனுக்கான குழு நிலை டிரா அறிவிப்புக்கு மத்தியில், ஐரோப்பாவில் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தியோருக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
எதிர்பார்த்தபடி, செல்சி மற்றும் எஃப்சி பார்சிலோனா வீரர்கள் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
சுவாரஸ்யமாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு எந்த விருதுகளும் இல்லை, இது கால்பந்து உலகில் புதிய சகாப்தம் தொடங்கியதை பிரதிபலிக்கிறது என பேசப்படுகின்றது்
⚽ UEFA ஆண்டின் சிறந்த ஆண் வீரர் – ஜார்ஜினோ
ஆண்கள் பிரிவில், கடந்த 12 மாதங்களில் கிளப் (செல்சியா) மற்றும் நாடு (இத்தாலி) ஆகிய இரு அணிகளுடனான வெற்றியை கருத்தில் கொண்டு ஜார்ஜினோ சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். விருதுக்கு N’Golo Kante மற்றும் Kevin de Bruyne ஆகியோரை தோற்கடித்து குழுவால் மிட்ஃபீல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
⚽ UEFA ஆண்டின் சிறந்த பெண் விளையாட்டு வீரர் – புட்டெல்லாஸ்
பெண்கள் பிரிவில், அலெக்ஸியா புட்டெல்லாஸ் 2020-21 இல் எஃப்சி பார்சிலோனா மற்றும் ஸ்பெயினுடனான தனது அற்புதமான பருவத்தை கருத்தில் கொண்டு சந்தேகத்திற்கு இடமின்றி தகுதியான வெற்றியாளராக தேர்வானார்.
27 வயதான அவர் தனது பார்சிலோனா அணியின் ஜென்னி ஹெர்மோசோ மற்றும் லைக் மார்டென்ஸ் ஆகியோரை தோற்கடித்து விருது வென்றார்.
⚽ ஆண்டின் ஆண்கள் பயிற்சியாளர் – தாமஸ் துச்செல் (செல்சி)
செல்சியின் தாமஸ் துச்செல் ஆண்டின் சிறந்த ஆண்கள் பயிற்சியாளருக்கான விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது
ஜெர்மன் மேலாளர் மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா மற்றும் இத்தாலியின் ராபர்டோ மான்சினி ஆகியோரை வென்று விருது பெற்றார்.
⚽ ஆண்டின் மகளிர் பயிற்சியாளர் – லூயிஸ் கோர்டெஸ்
FC பார்சிலோனாவின் லூயிஸ் கோர்டெஸ் கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் அருமையான ஆற்றலை கருத்தில் கொண்டு ஆண்டின் சிறந்த பெண்கள் பயிற்சியாளருக்கான விருதுக்கு தேர்வானார்.
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றவர்கள் பீட்டர் கெர்ஹார்ட்சன் (ஸ்வீடன்) மற்றும் எம்மா ஹேய்ஸ் (செல்சி).
2020-21 பருவத்திற்கான UCL விருதுகள்
UEFA சாம்பியன்ஸ் லீக்கின் கடைசி சீசனுக்கான சிறந்த கோல்கீப்பர், டிஃபென்டர், மிட்பீல்டர் மற்றும் ஃபார்வர்டர்களுக்கான விருதுகளும் விழாவில் அறிவிக்கப்பட்டது.
வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு: ???
⚽ சிறந்த கோல்கீப்பர்கள்
?ஆண்கள்: எட்வார்ட் மெண்டி – செல்சியா
?பெண்கள்: சாண்ட்ரா பனோஸ் – பார்சிலோனா
⚽ சிறந்த டிபன்டர்கள்.
?ஆண்கள்: ரூபன் டயஸ் – மன்செஸ்டர் சிட்டி
?பெண்கள்: ஐரீன் பரேடிஸ் – PSG
⚽ சிறந்த மிட்பீல்டர்கள்
?ஆண்கள்: என் கோலோ கான்டே – செல்சி
?பெண்கள்: அலெக்சியா புட்டெல்லாஸ் – பார்சிலோனா
⚽ Best forward
?ஆண்கள்: எர்லிங் ஹாலண்ட் – போருசியா டார்ட்மண்ட்
?பெண்கள்: ஜெனிபர் ஹெர்மோஸ் – பார்சிலோனா
குறிப்பிடத்தக்க வகையில், டென்மார்க்கின் கேப்டன் சைமன் கேஜெர் மற்றும் யூரோ கிண்ண தொடரின் போது கிறிஸ்டியன் எரிக்சனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழு 2021 UEFA UEFA President’s Award வெற்றி பெற்றது.