15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 3 உலக சாதனைகளை ஒரே தடவையில் தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட் ..!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் இப்போது மிகப் பெரிய துடுப்பாட்ட போர்மில் காணப்படுகிறார் .
ஓட்டங்களை சர்வசாதாரணமாக குவிப்பதில் அசகாய சூரனாக ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார் .
கிரிக்கெட் உலகில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக்காக்கப்படும் 3 மிகப்பெரும் உலக சாதனைகளை ஒரே தடவையில் தகர்த்தெறியும் முனைப்பில் ரூட் ஈடுபட்டிருக்கிறார் என்பது சிறப்பு தகவலாகும்.
ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர் என்ற சாதனையை முன்னாள் பாகிஸ்தான் ஆட்டக்காரர் மொஹமட் யூசுப் வசம் இருக்கிறது.
2006ஆம் ஆண்டு இவர் மொத்தமாக 11 டெஸ்ட்டில் 19 இன்னிங்ஸ்களில் விளையாடி 9 சதங்கள் அடங்கலாக 1788 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார் ,15 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
சங்கக்கார ,கோலி ஆகியோர் முயற்சித்து பார்த்தும் முடியாமல் தொடரும் இந்த சாதனையை ரூட் முறியடிப்பார் என நம்பப்படுகிறது.
இதுவரைக்கும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 ஒரு இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் ரூட், 6 சதங்கள் அடங்கலாக 1398 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இந்த சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் அவருக்கு 390 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகிறது ,இந்த ஆண்டில் குறைந்தது இன்னும் 9 இன்னிங்ஸ்களாவது இருக்கின்ற நிலையில் இந்த சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் .
நடப்பு இந்திய தொடரில் 64&109 ,180&33, 121 என ஓட்டமழை பொழிகின்றார்.
அதுமாத்திரமல்லாமல் ஒரு ஆண்டில் ஒரு அணித்தலைவராக அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்டவர் சாதனையையும் ஜோ ரூட் தகர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது . இதுவரை அந்த சாதனை தென் ஆபிரிக்காவின் கிரகாம் ஸ்மித் வசமுள்ளது. 2008 ல் படைக்கப்பட்ட இந்த சாதனையை தகர்க்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 275 ஓட்டங்கள் தேவைப்டுகின்றன,
அத்தோடு ஒரு ஆண்டில் அதிகமான சதங்களை பெற்ற பெற்றுக்கொண்ட அணித்தலைவர் எனும் சாதனை பொன்டிங் வசம் இருக்கிறது, 2006ஆம் 7 சதங்கள் பெற்றார். 15 ஆண்டுகளாக பொன்டிங் கொண்டிருக்கும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் ரூட்டுக்கு இருக்கிறது, இன்னும் இரண்டு சதங்களை பெறுவாராக இருந்தால் அந்த சாதனையும் முறியடிக்கப்படும்.
ஆக மொத்தத்தில் இந்த ஆண்டில் இந்த சாதனைகள் படைப்பதற்கு இலங்கை சுற்றுலா, இந்திய சுற்றுலா இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணியுடனான தொடர் ஆகிய மூன்று முக்கிய தொடர்களும் ஜோ ரூட்டுக்கு வழி சமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.