பேட்ஸ்மனாக மட்டுமல்ல கெப்டனாகவும் சாதனை படைத்திருக்கும் ரூட் – சாதனைக்கு பஞ்சமில்லை ..!

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கெப்டன்: முதல் இடத்தில் ஜோ ரூட்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் உள்ளார். ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்தாலும் இங்கிலாந்து அணி விமர்சனத்தை சந்தித்த வண்ணமே உள்ளது. இதற்கு ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சனை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்புவதே காரணம். என்றாலும் போட்டிகளில் விடாப்பிடியாக விளையாடி வெற்றிபெற்று வருகிறது இங்கிலாந்து அணி.

இன்றுடன் முடிவடைந்த லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இந்த வெற்றி இங்கிலாந்து கேப்டனாக ஜோ ரூட்டுக்கு 27-வது வெற்றியாகும்.

இதற்கு முன் மைக்கேல் வாகன் தலைமையில் இங்கிலாந்து அணி 51 டெஸ்டில் 26 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆண்ட்ரூ ஸ்டாரஸ் தலைமையில் 50 போட்டிகளில் 24 வெற்றிகளும், அலைஸ்டர் குக் தலைமையில் 59 டெஸ்டில் 24 வெற்றிகளும், பீட்டர் மே தலைமையில் 41 டெஸ்டில் 20 வெற்றியும் பெற்றிருந்தது.

#ABDH